--------------------------தீபச்செல்வன்
````````````````````````````````````````````````````````
ஜீன்சுக்குள் கிடந்த
நோக்கியாபோன் அலறுகிறது.
பத்து ரூபாய்க்கு வாங்கியருந்திய
முந்நூறு மில்லி
கொக்கக்கோலா சோடாவை
எழுபத்தைந்து ரூபாய்க்கு
வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன்.
இருபது ரூபாய்க்கு
வாங்கிய சிகரட்
வாயில்
கொளுந்து விட்டெரிகிறது
இன்னும் ஜந்து ரூபாவால்
அதிகரித்தபோதும்
வாய் எரியாமல் இருக்கிறது.
தெருவில் சிகரட்டை
சப்பியபடி
பியர்ப் போத்தலை
தூக்கி அருந்தியபடி திரிய முடிகிறது
எப்போதாவது வரும்
நெட்வேர்க்கில்
வியர்வையை காசுகளை
குடிக்கும்
நொக்கியாபோன் திரும்ப
அலறுகிறது
மேலதிக காசில் வாங்கும்
ரேசர் கோட் கார்ட்டுக்காக.
யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.
பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன.
காசைக் குடித்துவிட்டு
பசிகளின் முன்னால்
நொக்கியாபோன் காலை நீட்டிப் படுத்திருக்கிறது
சொற்களும் உரையாடல்களும்
கம்பிகளிலிருந்து வெளியே இருக்கிறது.
கொக்கக்கோலா சோடா அடங்கிக் கிடக்கிறது.
-----------------------------------------------------------------------------
ஜீன்சுக்குள் கிடந்த
நோக்கியாபோன் அலறுகிறது.
பத்து ரூபாய்க்கு வாங்கியருந்திய
முந்நூறு மில்லி
கொக்கக்கோலா சோடாவை
எழுபத்தைந்து ரூபாய்க்கு
வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன்.
இருபது ரூபாய்க்கு
வாங்கிய சிகரட்
வாயில்
கொளுந்து விட்டெரிகிறது
இன்னும் ஜந்து ரூபாவால்
அதிகரித்தபோதும்
வாய் எரியாமல் இருக்கிறது.
தெருவில் சிகரட்டை
சப்பியபடி
பியர்ப் போத்தலை
தூக்கி அருந்தியபடி திரிய முடிகிறது
எப்போதாவது வரும்
நெட்வேர்க்கில்
வியர்வையை காசுகளை
குடிக்கும்
நொக்கியாபோன் திரும்ப
அலறுகிறது
மேலதிக காசில் வாங்கும்
ரேசர் கோட் கார்ட்டுக்காக.
யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.
பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன.
காசைக் குடித்துவிட்டு
பசிகளின் முன்னால்
நொக்கியாபோன் காலை நீட்டிப் படுத்திருக்கிறது
சொற்களும் உரையாடல்களும்
கம்பிகளிலிருந்து வெளியே இருக்கிறது.
கொக்கக்கோலா சோடா அடங்கிக் கிடக்கிறது.
-----------------------------------------------------------------------------
3 கருத்துகள்:
யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.
பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன.
உரையாடலுக்காகத்தான் நாங்கள் எல்லோருமே ஏங்கிக் கோண்டிருக்கிறோம். எனில், எங்கள் எல்லோருடைய உரையாடலுக்கான ஏக்கத்தின் தேவையின் அளவு தான் வேறுபடுகிறது.
முற்றிலும் உரையாடல் பூட்டப்பட்ட, தொடர்புகள் துண்டிக்கப்பட்ட உலகத்துள் இருந்து எழுத்து ஊடாக உங்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்விதத்தில் எழுத்து பிறழ்வுகளிலிருந்து (எ/)உங்களைக் காக்கிறதெனலாமா?
கட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது.. போரினைப் போலவே, உரையாடலின்மையால் (பேசப்படாமையால்) நாங்கள் சுருங்கியிருக்கிறோம். திரைகளை விலக்கி உண்மையை அறியாது இன்னமும் எத்தனை எத்தனை விடயங்கள் எம்மிடையே மூடப்பட்டுக் கிடக்கின்றன? முதலில் நாங்கள் பேச வேண்டும். எங்களுக்குள்(ளும் வெளியும்) எங்களைக் கட்டுப்படுத்துகிறவற்றை, அவற்றினால் செலுத்தப்படும் உடல்-மனம்-அறிவு என...
தவிர, இந்தக் கவிதையில் பக்கத்தில் இருக்கிறவனை(இருக்கிறவளை) அறியாமல், வேறு நபர்களை அறிய விரும்புதலும், எங்கெங்கோ எம்மைத் தேடுதலும் என்பதான எமதியல்பை கூறுகிறதும் பிடித்திருந்தது.
நாங்கள் மீண்டும் மீண்டும் உரையாடுவோம்....!
மிக்க அன்புடனும், தோழமையுடனும்
பிரதீபா
நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.
ஜீன்சுக்குள் கிடந்த
நோக்கியாபோன் அலறுகிறது.
பத்து ரூபாய்க்கு வாங்கியருந்திய
முந்நூறு மில்லி
கொக்கக்கோலா சோடாவை
எழுபத்தைந்து ரூபாய்க்கு
வாங்கி அருந்திக் கொண்டிருந்தேன்.
இருபது ரூபாய்க்கு
வாங்கிய சிகரட்
வாயில்
கொளுந்து விட்டெரிகிறது
இன்னும் ஜந்து ரூபாவால்
அதிகரித்தபோதும்
வாய் எரியாமல் இருக்கிறது.
தெருவில் சிகரட்டை
சப்பியபடி
பியர்ப் போத்தலை
தூக்கி அருந்தியபடி திரிய முடிகிறது
எப்போதாவது வரும்
நெட்வேர்க்கில்
வியர்வையை காசுகளை
குடிக்கும்
நொக்கியாபோன் திரும்ப
அலறுகிறது
மேலதிக காசில் வாங்கும்
ரேசர் கோட் கார்ட்டுக்காக.
யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.
பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன.
காசைக் குடித்துவிட்டு
பசிகளின் முன்னால்
நொக்கியாபோன் காலை நீட்டிப் படுத்திருக்கிறது
சொற்களும் உரையாடல்களும்
கம்பிகளிலிருந்து வெளியே இருக்கிறது.
கொக்கக்கோலா சோடா அடங்கிக் கிடக்கிறது.
--தீபச்செல்வன்
அன்புடன் பிரதீபா.
உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி.
உங்களுடைய கருத்திலும்
பார்வையிலும் தெளிவு இருக்கிறது.
எழுமாற்றான கருத்துகளையும் முகத்துதிகளையும்
கூறிவரும் சூழலில்
உங்களுடைய கருத்தும்
அர்த்தமுடையதாக இருக்கிறது.
மிக்க அன்புடன்
தீபச்செல்வன்
கருத்துரையிடுக