கவிதை:தீபச்செல்வன்
_______________________________
மீண்டும் பொதி சுமக்கும்
நாட்கள் வந்துவிட்டன
பெரிய நகரத்தினை
சூழ்க்கிற படைகள்
பிணங்களோடு வருகின்றனர்
எனது
பழைய சைக்களில்
எந்தப் பொதியை
ஏற்றிச் செல்கிறாய்
படையெடுக்கும் இரவில்
நான்
உன்னை கைவிட்டு வந்தேன்
எனது பொதிகளையும்
நீ சுமந்து செல்லுகிறாய்.
முதுகில் வழிகிறது உனது சுமை.
வேப்பமரங்களை
பாம்புகள் சூழ்ந்த நாளில்
மாமரத்திலிருந்து
தோட்டாக்கள் உதிர்ந்த நாளில்
முற்றங்களில் குழிகள் விழுந்தன.
கொய்யாமரத்தின் கீழிருக்கும்
கிடங்கில்
பதுங்கியிருக்கிறது
ஷெல்லில் தாயை இழந்த
ஆட்டுக்குட்டி.
நீ மண் சுமந்த நகரத்தை
நேற்று முதல் நாளிலிருந்து
படைகள் கடிக்கத் தொடங்கி விட்டன.
அந்தச் சைக்கிளில்
நான் திரிந்த நகரம்
எல்லோருடைய கால்களையும்
இழந்து விடுகிறது
அலைவதற்கு இடங்கள் இல்லாத பொழுது
வழிகள்
முற்றுகையிடப்பட்டபொழுது
காடுகளில் மிதக்கின்றன
பொதிகள்
இணைக்கப்பட்ட தலைகள்.
நமது வீட்டிற்குச் செல்லும்
ஒழுங்கையில்
மாடுகள் செத்துக்கிடக்கின்றன.
கிணறுகள் மூடுண்டு கிடக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு
கட்டி முடித்த நகரத்தின்
கடைத் தெருக்களையும்
தண்ணீர்க் குழாய்களையும்
மின்சாரக் கம்பிகளையும்
அறுத்துக்கொண்டு வருகிறது ட்ராங்கி.
சூரியனுக்குப் பதிலாக டெலிகப்ரர் தெரிகிற
குண்டுகளின் புகையில்
விடிகிற காலையில்
குடிப்பதற்கு தண்ணீருக்கும்
அதை நிரப்ப
ஒரு கோப்பைக்கும்
நீ அலைவதைக்கூட
நான் அறியமுடியாதிருக்கிறது.
------------------------------------------------
18.09.20008
------------------------------------------------------
நாட்கள் வந்துவிட்டன
பெரிய நகரத்தினை
சூழ்க்கிற படைகள்
பிணங்களோடு வருகின்றனர்
எனது
பழைய சைக்களில்
எந்தப் பொதியை
ஏற்றிச் செல்கிறாய்
படையெடுக்கும் இரவில்
நான்
உன்னை கைவிட்டு வந்தேன்
எனது பொதிகளையும்
நீ சுமந்து செல்லுகிறாய்.
முதுகில் வழிகிறது உனது சுமை.
வேப்பமரங்களை
பாம்புகள் சூழ்ந்த நாளில்
மாமரத்திலிருந்து
தோட்டாக்கள் உதிர்ந்த நாளில்
முற்றங்களில் குழிகள் விழுந்தன.
கொய்யாமரத்தின் கீழிருக்கும்
கிடங்கில்
பதுங்கியிருக்கிறது
ஷெல்லில் தாயை இழந்த
ஆட்டுக்குட்டி.
நீ மண் சுமந்த நகரத்தை
நேற்று முதல் நாளிலிருந்து
படைகள் கடிக்கத் தொடங்கி விட்டன.
அந்தச் சைக்கிளில்
நான் திரிந்த நகரம்
எல்லோருடைய கால்களையும்
இழந்து விடுகிறது
அலைவதற்கு இடங்கள் இல்லாத பொழுது
வழிகள்
முற்றுகையிடப்பட்டபொழுது
காடுகளில் மிதக்கின்றன
பொதிகள்
இணைக்கப்பட்ட தலைகள்.
நமது வீட்டிற்குச் செல்லும்
ஒழுங்கையில்
மாடுகள் செத்துக்கிடக்கின்றன.
கிணறுகள் மூடுண்டு கிடக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு
கட்டி முடித்த நகரத்தின்
கடைத் தெருக்களையும்
தண்ணீர்க் குழாய்களையும்
மின்சாரக் கம்பிகளையும்
அறுத்துக்கொண்டு வருகிறது ட்ராங்கி.
சூரியனுக்குப் பதிலாக டெலிகப்ரர் தெரிகிற
குண்டுகளின் புகையில்
விடிகிற காலையில்
குடிப்பதற்கு தண்ணீருக்கும்
அதை நிரப்ப
ஒரு கோப்பைக்கும்
நீ அலைவதைக்கூட
நான் அறியமுடியாதிருக்கிறது.
------------------------------------------------
18.09.20008
------------------------------------------------------
3 கருத்துகள்:
//நான் திரிந்த நகரம்
எல்லோருடைய கால்களையும்
இழந்து விடுகிறது//
வாழ்த்துக்கள் சொல்லவா
இல்லை கூடச் சேர்ந்து
நானும் ஒரு துளி அழவா
அறுக்க முடியாத அவலத்தை
பகிரத்துடிக்கிற அந்தச் சிறகுகளின்
வலியை கடவுளே கொஞ்சம் வாங்கிக்கொள்
என்றுதான் சொல்லத் தோன்றுகிறது
தீபன் இன்னும் எழுது
வார்த்தைகள் உன்னை உயர்த்தட்டும்
சினேகத்துடன்
அன்புள்ள மயூரன் உங்கள் வருகைக்கு நன்றி.
மற்றும்
அருள்நேசன் உனது கருத்துக்கு நன்றி.
கருத்துரையிடுக