---------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.
இந்த நகரத்தின் பெருஞ்சுவர்களை
அழித்த பிறகு
வீடுகளை புதைக்கிற
நிகழ்வு அறிவிக்கப்படுகிறது
பூக்கள் பற்றிய கனவு உதிர
வரிசையாய் போடப்பட்ட கதிரைகளை
உடைத்துதெறிக்கும் தீர்வு வருகிறது.
பூக்களை உற்பத்தி செய்யும்
நகரத்தை அழிப்பதற்கு பிரகடனத்தை
அறிவித்தபொழுது
புரதான பெருஞ்சுவர்கள் அதிர்ந்து போயின.
விமானங்களுக்கு பலிகொடுக்கப்பட்ட
மேசைகள் உடைந்து கிடக்கும்
வெடித்துச் சிதறிய கண்ணாடி மாளிகைகளில்
அருந்திவிட்டுப்போன
தேனீரின் மிச்சம் காயாமாலிருக்கிறது.
எல்லோரும் வந்திருந்து பேசிய
கதிரைகளை உடைத்துவிட்டுப்போகையில்
அருகிலிருந்த மாமரங்கள் முறிந்து விழ்ந்தன.
யுத்தத்தின் விதி புதியதாய் இயற்றப்பட்டு
மாறிக்கொண்டிருந்தது.
மூன்றாவது போர் முடிந்தபொழுது
எழுப்பப்பட்ட மாளிகைகள்
மீண்டும் தகர்ப்பதற்கான
நாலாவது போர் ஒளிந்திருந்தது.
02
ஷெல்கள் வந்து விழும்
நகரத்தின் மையத்திலிருக்கும்
மருத்துவமனையில்
காயமடைந்து வந்து சேர்ந்த
நோயாளியின் அதிருகிற தெருவின்
அழும் குரலில்
ஒரு பெரிய சனக்கூட்டத்தின்
ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தது.
பூக்கள் பற்றிய கனவிலிருந்து
வெளியேறும் தருணம் வருகிறது.
இந்த நகரத்தோடும்
சனங்களின் மரணத்தோடும்
துப்பாக்கி அணிந்து வீழ்ந்த போராளிகளோடும்
பூக்களின் நகரம் பற்றிய கனவு
முடிந்துபோய்வடுவதாய் கருதப்படுகையில்
அரசுகளின் யுத்தக்கனவில்
இனநிலவெறி நாடு ஆடுகிறது.
எல்லோரும் பயங்கரவாதிகள் என்று
அறிவிக்கப்படுகையில்
எஞ்சியிருந்த பூக்கள் உதிர
நகரத்தை அழிப்பதற்கான பிரகடனம் கேட்கையில்
உடைந்த கதிரைகள் மேலும் உடைய
அதன் கைகளிலும் துப்பாக்கிகள் முளைத்தன.
வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்களின் நகரம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.
-----------------------------------------
05.10.2008
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.
இந்த நகரத்தின் பெருஞ்சுவர்களை
அழித்த பிறகு
வீடுகளை புதைக்கிற
நிகழ்வு அறிவிக்கப்படுகிறது
பூக்கள் பற்றிய கனவு உதிர
வரிசையாய் போடப்பட்ட கதிரைகளை
உடைத்துதெறிக்கும் தீர்வு வருகிறது.
பூக்களை உற்பத்தி செய்யும்
நகரத்தை அழிப்பதற்கு பிரகடனத்தை
அறிவித்தபொழுது
புரதான பெருஞ்சுவர்கள் அதிர்ந்து போயின.
விமானங்களுக்கு பலிகொடுக்கப்பட்ட
மேசைகள் உடைந்து கிடக்கும்
வெடித்துச் சிதறிய கண்ணாடி மாளிகைகளில்
அருந்திவிட்டுப்போன
தேனீரின் மிச்சம் காயாமாலிருக்கிறது.
எல்லோரும் வந்திருந்து பேசிய
கதிரைகளை உடைத்துவிட்டுப்போகையில்
அருகிலிருந்த மாமரங்கள் முறிந்து விழ்ந்தன.
யுத்தத்தின் விதி புதியதாய் இயற்றப்பட்டு
மாறிக்கொண்டிருந்தது.
மூன்றாவது போர் முடிந்தபொழுது
எழுப்பப்பட்ட மாளிகைகள்
மீண்டும் தகர்ப்பதற்கான
நாலாவது போர் ஒளிந்திருந்தது.
02
ஷெல்கள் வந்து விழும்
நகரத்தின் மையத்திலிருக்கும்
மருத்துவமனையில்
காயமடைந்து வந்து சேர்ந்த
நோயாளியின் அதிருகிற தெருவின்
அழும் குரலில்
ஒரு பெரிய சனக்கூட்டத்தின்
ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தது.
பூக்கள் பற்றிய கனவிலிருந்து
வெளியேறும் தருணம் வருகிறது.
இந்த நகரத்தோடும்
சனங்களின் மரணத்தோடும்
துப்பாக்கி அணிந்து வீழ்ந்த போராளிகளோடும்
பூக்களின் நகரம் பற்றிய கனவு
முடிந்துபோய்வடுவதாய் கருதப்படுகையில்
அரசுகளின் யுத்தக்கனவில்
இனநிலவெறி நாடு ஆடுகிறது.
எல்லோரும் பயங்கரவாதிகள் என்று
அறிவிக்கப்படுகையில்
எஞ்சியிருந்த பூக்கள் உதிர
நகரத்தை அழிப்பதற்கான பிரகடனம் கேட்கையில்
உடைந்த கதிரைகள் மேலும் உடைய
அதன் கைகளிலும் துப்பாக்கிகள் முளைத்தன.
வாழ்வு பற்றி பெரிய ஆசையிருந்தது
பூக்களின் நகரம் பற்றி நிறைய கனவுகள் இருந்தன.
-----------------------------------------
05.10.2008
3 கருத்துகள்:
இலங்கையின் உண்மை நிலையை கண்முன்னே கொண்டு வரும் கவிதை வரிகள். அருமையான படங்கள் கவிதைகளுக்கு அழகூட்டுகின்றன.
போரின் கொடுமை பிறந்த மண்ணைத் தின்னும் கொடுமையென யுத்தம் எங்கள் அழகிய நகரங்களை ஆக்கிரமிக்கிறது. துயரோடு செய்திகளைப் பார்த்தபடி புலம்பெயர் நாடுகளில் நாங்கள்.
வாழ்த்துக்கள் தீபச்செல்வன் எனச்சொல்லி உங்கள் வலிமிகு படைப்பை வரையற முடியாதபடி காலம் உங்கள் கவிதைகளில் தன் முகம் பதித்திருக்கிறது.
- சாந்தி -
தீபச்செல்வன்,
உங்கள் கவிதை வரிகளை 'குங்குமத்தில்' பார்த்தேன். டி.அருள் எழிலன் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. வலியின் பதிவுதான் என்றாலும் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக