சூரியனை சரித்து போட்டிருந்தனர்
உயிர் வயலில்
எல்லாக் கன்றுகளும் இறந்து கிடந்தன
ஒரு தாய் தன் குழந்தைகளை அணைத்தபடி
இறந்து கிடந்ததை நீ பார்த்திருப்பாயா?
கடைசியில்
அங்கு ஏன் நெருப்பெரிந்து
இருள் பிறந்தது?
ஏன் வானம் இருண்டு மழை பொழிந்தது?
உயிர் வயலில்
எல்லாக் கன்றுகளும் இறந்து கிடந்தன
ஒரு தாய் தன் குழந்தைகளை அணைத்தபடி
இறந்து கிடந்ததை நீ பார்த்திருப்பாயா?
கடைசியில்
அங்கு ஏன் நெருப்பெரிந்து
இருள் பிறந்தது?
ஏன் வானம் இருண்டு மழை பொழிந்தது?
அந்த மனிதனின் இறுதி வார்த்தைகள் என்ன?
வானம் என்ன சொல்லி அழுதது?
பெருநிலம் உறைந்து போயிருந்தது
நமது நகரங்கள் உடைந்து போயிருந்தன
கடைசி மனிதன் எங்கோ வெளியேறிச் சென்றிருக்கிறான்.
வானம் என்ன சொல்லி அழுதது?
பெருநிலம் உறைந்து போயிருந்தது
நமது நகரங்கள் உடைந்து போயிருந்தன
கடைசி மனிதன் எங்கோ வெளியேறிச் சென்றிருக்கிறான்.
புதருக்கிடையில் குருதி பாய்ந்து கொண்டிருக்க
கபாலம் கொள்ளையடிக்கப்பட்டு
கிழக்கில் கிடந்தது பச்சை சூரியன்.
(மே 18) கபாலம் கொள்ளையடிக்கப்பட்டு
கிழக்கில் கிடந்தது பச்சை சூரியன்.
_________________
தீபச்செல்வன்
1 கருத்துகள்:
அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.
நிர்வாக குழு,
தகவல் வலைப்பூக்கள்.....
http://thakaval.info/blogs/poems
கருத்துரையிடுக