மிக மிக எளிதாக சிந்தவைக்
கப்பட்டதுபோல
மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி
யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர்
வாழ்பவர்களின் குருதியையும்
மாபெரும் சவக்கிடங்கைமூடும்
மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும்
உதவிக்கு
மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள்
வெடிலடிக்கும் கொடிகளோடு
எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில்
பேரம் பேசும் கொலையாளிகள்
இடைவேளையில் அருந்தினர்
ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்
கொன்று தின்றவனே
தன் வாயினை துடைக்கட்டுமென
பூமியெங்கும்
நீங்க மறுக்கும் குருதிக்கறைகள்
அது அவ்வளவு எளிதல்ல
மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல
மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி
எளிதாக மறைக்கப்பட்ட
ஒன்றரை லட்சம் உடல்களைப்போல
நசிக்கிப் புதைக்க முடியவில்லை
அழிக்கப்பட்டவர்களின் குரல்களை
தீபச்செல்வன்
நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்
2 கருத்துகள்:
எமது மக்களின் அழிக்க இயலாத இரத்த சுவடுகளுக்கு அறமற்ற இந்த உலக சமூகம் கட்டாயம் பதிலிருத்தே ஆக வேண்டும். அதுவரை பூமியே, என் இரத்தத்தை மூடிப் போடாதே, என் அலறலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. யோபு (16:18) பரிசுத்த வேதாகமம்.

கருத்துரையிடுக