சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்கும்
தேசத்தில் செண்பகப் பறவைகள் வந்து
பூவரச மரங்களில் அமரும்
காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன
மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்
சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
பறவையைப்போலான
எனது அழகிய தேசம் பூக்கும்.
2012
நன்றி - சமூகநீதித் தமிழ்த் தேசம் செப்டம்பர்
தொகுப்பு - எனது குழந்தை பயங்கரவாதி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக