ஒவ்வொன்றாய் விழுகின்றன மண்மேடுகள்
மரணக் கிடங்கில் துயர் கொண்டலையும்
பிணதேசத்தின் குழந்தைகள்
யாரிடமும் இல்லை கருணை
குழந்தைகளின் விழிகள்
இதற்கு முன்பு பூமி பார்த்திராத
கண்ணீர், குருதி
இதற்கு முன்பு பூமி பார்த்திராத
வீரயுகம், தோல்வி
எல்லோருக்கும் கேட்கும் விதமாய்
எஞ்சியிருக்கும் குழந்தைகள்
என்ன சொல்லி அழுகின்றனர்?
கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து
மீள அதே இடத்திற்குத் திரும்பிய
வானம் பெயர்ந்து சுருங்கி வீழ்கிறது.
எஞ்சியிருக்கும் குழந்தைகள்
என்ன சொல்லி அழுகின்றனர்?
கடல்கரையோரமாய் பெயர்ந்தலைந்து
மீள அதே இடத்திற்குத் திரும்பிய
வானம் பெயர்ந்து சுருங்கி வீழ்கிறது.
யாரிடமும் இல்லை கருணை
குழந்தைகளின் விழிகள்
புதையுண்டன மணலில்
இன்று பின்னிரவிலும் ஆயிரம் பிணங்கள்
மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்தன
மீற்றர்களினால் முன்னேறுகிற
படைகள் பிணங்களின் குழந்தைகளை
மீட்டு படம் பிடித்தனர்.
கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களின் காட்சிகளுடன்
மூளும் தாக்குதல்களில்
மேலும் சுருங்குகிறது மண்
கைப்பற்றப்பட்ட மண்ணரணுள்
மூடப்பட்டிருக்கின்றன உயிரிருக்கும் பிணங்கள்.
வீழ்கிறது மண்
குழந்தைகள் மீளமீள மோதுகின்றனர் மணலில்
யுத்தத்தில் துயரமில்லை என்றனர்
இன்று பின்னிரவிலும் ஆயிரம் பிணங்கள்
மண்மேடுகளின் பின்பக்கமாய் விழுந்தன
மீற்றர்களினால் முன்னேறுகிற
படைகள் பிணங்களின் குழந்தைகளை
மீட்டு படம் பிடித்தனர்.
கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களின் காட்சிகளுடன்
மூளும் தாக்குதல்களில்
மேலும் சுருங்குகிறது மண்
கைப்பற்றப்பட்ட மண்ணரணுள்
மூடப்பட்டிருக்கின்றன உயிரிருக்கும் பிணங்கள்.
வீழ்கிறது மண்
குழந்தைகள் மீளமீள மோதுகின்றனர் மணலில்
யுத்தத்தில் துயரமில்லை என்றனர்
குருதியில் தோய்ந்த வெற்றியை உண்டு மகிழ்ந்தனர்
இறுதிக் கட்டமாகவே
கழுத்து நெறிக்கப்படுகிறது என்றனர்
அதன் பின்னர் குருதியும் இல்லை
உயிரும் இல்லை என்றனர்
இரண்டு இராணுவ அணிகள் சந்தித்து
கொடிகளை அசைத்தனர்
மூச்சடங்கிய குழந்தைகளின்மீது
பிணங்களைப் பற்றிப் பிடித்தனர் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
பிணங்களைப் பற்றிப் பிடித்தனர் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
வீர யுகம் தீர்கிறது மணலில்
தீருகின்றனர் சனங்கள்
ஒவ்வொன்றாய் விழ்கின்றன
தீருகின்றனர் சனங்கள்
ஒவ்வொன்றாய் விழ்கின்றன
பாதுகாத்திருந்த மண்மேடுகள்.
தீபச்செல்வன்
15.05.2009
தீபச்செல்வன்
15.05.2009
1 கருத்துகள்:
//சுற்றிக்கொண்டிருக்கிற தாக்குதல்களில்
அடைந்த வெற்றியின் களிப்பில்
கிலோமீற்றர்கள் மேலும் சுருங்குகின்றன.//
இன்று ஒரு பிரபாகரனைப் பிடித்துவிடலாம் அதற்காக பல்லாயிரம் பேரை பலியிடலாம் ஆனால் மிஞ்சியிருக்கும் ஒவ்வொறு அணுவும் ஓராயிரம் பிரபாகரனையல்லவா உருவாக்கிவிடும். எனது வருத்தமெல்லாம் இலங்கை ஈராக்கைப் போன்று இன்னொரு நிரந்தர யுத்த பூமியாகிவிடக்கூடாதே என்பதுதான். யுத்தத்திலேபிறந்து யுத்தத்திலே பிழைத்து வளரும் குழந்தைகள் மனதில் அன்பை யார் விதைப்பது. இன்றய தினம் இங்கு அவரவர் தங்கள் நாற்காலியைப் பிடித்துவிட்டார்கள். அவர்கள் கவனம் இலங்கைப் பக்கம் திரும்ப எவ்வளவு நாட்களாகும்? திரும்புமா?
வரலாறு திரும்பும்,சக்கரம் சுழலும்,துவக்கப்பட்ட எதற்கும் முடிவு உண்டு என்ற நம்பிக்கையில் மட்டும் நம்பிக்கைக்கொண்டு நெஞ்சில் பாரத்தோடு...
கருத்துரையிடுக