o தீபச்செல்வன்
01
லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.
மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடிவிட
லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.
இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.
02
அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.
இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.
அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.
லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்
அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன.
01
லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.
மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடிவிட
லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.
இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.
02
அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.
இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.
அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.
லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்
அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளிகளான 15வயதுச் சிறுமியான லூர்த்தம்மாவும் அவளின் அண்ணனான 16வயதுடைய அபிராஜிம் இராணுவத்திடம் சரணடைந்து- கைதுசெய்யப்பட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுடன் 94 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 44பேர் சிறுமியர்கள் எனவும் லூர்த்தம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தாள்.
3 கருத்துகள்:
கசப்பான உண்மை இதுவாகவே இருக்கின்றது.
விளையாட்டுப்பராயத்தில் யுத்தம் சிறுவர்கள்மீது
திணிக்கப்ட்டது என்கின்ற உண்மை
"பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன"
என்கின்ற வரிமுலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சகோதர பாசத்தை வேளிப்படுத்துவதாகவும் உள்ளது.
"அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்"
என்கின்றவரிகள் அவர்கள் தொடர்ந்தும் எவ்வாறு
இராணுவத்தால் வதைக்கப்படுகின்றார்கள் என்பது மறைமுகமாக
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வன்னியில் பல்வேறுபட்ட துன்னங்ளை அனுபவித்த சிறுவர்கள்
தொடர்ந்தும் துன்பங்களை மேசமா அனுபவிக்கின்றனர் என்பதே
யதார்த்தம்.
கவிதை யதார்த்தம்.
............செம்மதி......
சிறார்களை பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்தமையும், இயக்கத்துக்காகவே மக்கள் எனும் கருத்தும் குடிகொண்டமையாலே தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னையே அழித்துக் கொண்டது.
கசக்கிறது உண்மைகள் அதற்காய் பூசிமெழுகி நடிக்க முடியாதபடி தீபச்செல்வனின் கவிதை முகத்தில் ஓங்கியறைகிறது.
சாந்தி
கருத்துரையிடுக