o தீபச்செல்வன் ------------------------------------------------------------------
ரொட்டிகளை தூக்கி வைத்திருந்த குழந்தைகளிடமிருந்து
அவற்றை விலக்கும்படி கூறுகிறாள்.
உணவுக்கோப்பையை தூக்கும்பொழுதெல்லாம்
ரொட்டித்துண்டுகளே அவளின் முன்னால் விழுகின்றன.
குருதியுறியதும் ஊறைந்ததுமான
ரொட்டித்துண்டுகள் ஏப்பொழும் மணந்தபடியிருக்கின்றன.
அந்தப் பதுங்குகுழியை குருதியுறியபடி
அன்றிரவு முழுக்க கழிக்க வேண்டியிருந்தது.
குழந்தைகள் ரொட்டித்துண்டுகளுக்கு
ஆசைப்பட்டிருக்காது விட்டிருக்கலாம் என சொல்லுகிறாள் தாய்.
வெளியில் யாரும் செல்லவில்லை.
பதுங்குகுழியின் இரண்டாவது படியிலேயே
அடுப்பு எரிந்துகொண்டிருந்தது.
குழந்தைகள் பட்டினியால் துடித்து
உணவுக்காக காத்திருந்தார்கள்.
அம்மா ஒவ்வொரு ரொட்டிகளாக தட்டிக்கொண்டிருந்தாள்.
குழந்தைகள் முதல் ரொட்டி சுடப்படடு முடிந்ததும்
ஓவ்வொருவருக்காக கிடைத்துக்கொண்டிருந்தது.
அம்மாவுக்கான ரொட்டியே
தகரத்தில் வேகிக்கொண்டிருந்தது.
மிக இலகுவாக அந்த ரொட்டியையும் தகரத்தையும்
அப்பாவையும்
ஷெல் வந்து கிழித்துவிட்டது.
அம்மாவின் ரொட்டியை ஷெல் தின்றுவிட்டது.
அப்பாவின் குருதியால்
நனைத்து ஊறியப்போயிருந்தது அன்றிரவு.
எல்லோருடைய ரொட்டிகளிலும் குருதி பட்டுத் தெறித்தது.
யாரும் அறியாத அவளின் பசியையும்
ரொட்டி பற்றிய கதைகளையும் குழந்தைகள்
கேட்டு அதிர்ந்து போயினர்.
பல்வேறு வடிவிலான கதைகளை ரொட்டித்துண்டுகளில்
வாசித்த குழந்தைகள்
அவற்றை உண்ணாமலே வைத்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
__________________________
12.11.2009
நன்றி: ஆதவன் பெப்ரவரி
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
1 கருத்துகள்:
குழந்தைகள் முதல் ரொட்டி சுடப்படடு முடிந்ததும்
ஓவ்வொருவருக்காக கிடைத்துக்கொண்டிருந்தது.
இங்கு சொல்லப்படவந்தவிடயம் தெளிவில்லாமல் குழம்பிப்போயிருப்பதாக உணர்கிறேன். தவிர கவிதை சிறப்பாகஇருக்கிறது.
கருத்துரையிடுக