தீபச்செல்வன்
ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும்
சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது
குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம்
செல்துளைத்த ஓட்டைக்குள்ளால்
பள்ளியிலிருந்து பார்த்த பொழுது
அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது
வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில்
ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர்
யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான்
கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில்
விளையாடும் குழந்தைகளில்லை
குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது
கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த
குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுபடுத்தும் யுத்தக்கல்
விழுந்தது காலற்ற சிறுவனின் முதுகுமீது.

நன்றி - கல்கி ஆகஸ்ட் 2012
1 கருத்துகள்:
நீளும் எங்கள் துயரங்கள்போல் குழந்தைகள் பற்றிய கதைகளும் தீராமல் நீண்டுகொண்டேயிருக்கிறது உங்கள் கவிதைகளில்.
கருத்துரையிடுக