மரணம் கொன்றடக்கப்படும்
ஆயுதமாகும் பொழுது
யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள்
சனங்கள் அமைதியின் நிழலை
இப்பூமியில்
என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள்
இருள் கவிழந்த பொழுதில்
இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன்
உனது போரைத் துடைத்து
அதிகார நிழலை அடித்து விரட்டுகையில்
இப்பூமியில் வெளிச்சம் படரும்
இரத்தமும் காயமும் இல்லாத
பூக்கள் பூத்துக் கொட்டும்
அமைதியின் நிழலைப்
பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம்
அது எவ்வளவு அழகாயிருக்கும்?
_________________________
தீபச்செல்வன்
1 கருத்துகள்:
நம்பிக்கை மொழி பேசும் கவிதைகள் அவசியமானவை..... கவிதை அருமை
கருத்துரையிடுக