கொலைகளுக்கு எதிராய்
தீப் பிழம்புகளைத் தின்று
செங்கொடி உயிரில் உக்கிரம் கொண்டாடினாள்
அதிகாரம் மூடியிருந்த பொழுது
எரிக்க முடியாத பூமியில் கலந்து விளைந்த
அதிகாரத்தை எரிக்க தன்னை எரித்தாள்
அன்றும் ஒருத்தி கொலைக்கெதிராய்
பெரும் நகரத்தோடு எரிந்தாள்
செங்கோல்கள் உயிர்களை
குடிக்கும் பொழுதெல்லாம்
பூமியை காக்க எரித்தாடுகிறாள்
கொலைக்கத்திகள் எல்லோரையும் நோக்கின
உயிர் குடிக்கும் கயிறுகள்
எல்லோரையும் சுற்றின
இனம் திண்ணும்
வாய்கள் பெரும்பசியோடு நீண்டன
அரசர்கள் உயிரைக் கொல்லும் தீர்ப்பெழுதினர்
கருணையை நிராகரித்து
மரணத்தை பிரகடனம் செய்தனர்
கொதித்த நிலத்திற்காய்
செங்கொடி உடல்த் தீமரமாய்
எரிந்து பரவி கிளைகள் உலுப்பினாள்
சலங்கைகள் வெடித்துச் சிதறுண்டன
பறைகள் அதிர முழங்கின
பூமிக்காய் அவள் தீயில் நுழைந்த பொழுது
பூமி தீப்பிடித்தெரிந்தது.
_______________________
செங்கொடிக்கு
தீபச்செல்வன்
தீப் பிழம்புகளைத் தின்று
செங்கொடி உயிரில் உக்கிரம் கொண்டாடினாள்
அதிகாரம் மூடியிருந்த பொழுது
எரிக்க முடியாத பூமியில் கலந்து விளைந்த
அதிகாரத்தை எரிக்க தன்னை எரித்தாள்
அன்றும் ஒருத்தி கொலைக்கெதிராய்
பெரும் நகரத்தோடு எரிந்தாள்
செங்கோல்கள் உயிர்களை
குடிக்கும் பொழுதெல்லாம்
பூமியை காக்க எரித்தாடுகிறாள்
கொலைக்கத்திகள் எல்லோரையும் நோக்கின
உயிர் குடிக்கும் கயிறுகள்
எல்லோரையும் சுற்றின
இனம் திண்ணும்
வாய்கள் பெரும்பசியோடு நீண்டன
அரசர்கள் உயிரைக் கொல்லும் தீர்ப்பெழுதினர்
கருணையை நிராகரித்து
மரணத்தை பிரகடனம் செய்தனர்
கொதித்த நிலத்திற்காய்
செங்கொடி உடல்த் தீமரமாய்
எரிந்து பரவி கிளைகள் உலுப்பினாள்
சலங்கைகள் வெடித்துச் சிதறுண்டன
பறைகள் அதிர முழங்கின
பூமிக்காய் அவள் தீயில் நுழைந்த பொழுது
பூமி தீப்பிடித்தெரிந்தது.
_______________________
செங்கொடிக்கு
தீபச்செல்வன்
1 கருத்துகள்:
நல்லதொரு உணர்வு பூர்வமான கவிதை. செங்கொடியன் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன். தவறுக்கெதிராக உயிர்கொடை செய்வதைவிட உயிருடன் இருந்து இறுதிவரை போராடுவது நல்லதென நினைக்கிறேன்
கருத்துரையிடுக