¤
என் நகரத்தின் கடைசி தருணம்
அதுவென நினைத்திருக்கவில்லை
உன்னை முத்திமிடுகிறபோது
அது கடைசி முத்தமெனவும் நினைத்திருக்கவில்லை
போருக்கான வார்த்தைகள்
எழுதப்பட்ட நகரத்தில் உன்னை
தனியே விட்டு வந்தேன்.
எப்படி பிரிந்து போயிற்று என் தெரு?
இழப்பின் கொடுமையை
நீதான் முழுமையாக சுமந்திருந்தாய்
நான் உன்னை இழந்து
தனிப் பறவையாய் வீசப்பட்டேன்.
நமக்கு மேலால் நின்ற நாவல் மரம்
முறிந்து போனதை
நீ எனக்கு சொல்லாமலே விட்டிருந்தாய்
நிழலற்றுத் திரிவதை நான் பார்க்கவுமில்லை
நாம் நாவல் மரத்தை இழந்திருக்க
அது வெளவால்களை இழந்துபேயிற்று.
விமானங்கள் வீடுகளை
கவ்விக்கொண்டு போகிறதாக
நான் கனவு கண்டெழும்புகையில்
நீ நமது நகரத்தில் இருந்து
துரத்தப்பட்டாய்
காலையென்பது இழப்புடன்
தொடர்ந்து விடிகிறது.
எனது பேரூந்து திரும்பவில்லை
காத்திருப்பில் நீ அலைகிற துயர்மிகு
தெருவுக்கு நான் திரும்பவில்லை
போர் உன்னை
என்னிடமிருந்து பிரித்துவிட்டது.
அது கடைசி முத்தமெனவும் நினைத்திருக்கவில்லை
போருக்கான வார்த்தைகள்
எழுதப்பட்ட நகரத்தில் உன்னை
தனியே விட்டு வந்தேன்.
எப்படி பிரிந்து போயிற்று என் தெரு?
இழப்பின் கொடுமையை
நீதான் முழுமையாக சுமந்திருந்தாய்
நான் உன்னை இழந்து
தனிப் பறவையாய் வீசப்பட்டேன்.
நமக்கு மேலால் நின்ற நாவல் மரம்
முறிந்து போனதை
நீ எனக்கு சொல்லாமலே விட்டிருந்தாய்
நிழலற்றுத் திரிவதை நான் பார்க்கவுமில்லை
நாம் நாவல் மரத்தை இழந்திருக்க
அது வெளவால்களை இழந்துபேயிற்று.
விமானங்கள் வீடுகளை
கவ்விக்கொண்டு போகிறதாக
நான் கனவு கண்டெழும்புகையில்
நீ நமது நகரத்தில் இருந்து
துரத்தப்பட்டாய்
காலையென்பது இழப்புடன்
தொடர்ந்து விடிகிறது.
எனது பேரூந்து திரும்பவில்லை
காத்திருப்பில் நீ அலைகிற துயர்மிகு
தெருவுக்கு நான் திரும்பவில்லை
போர் உன்னை
என்னிடமிருந்து பிரித்துவிட்டது.
யாரிடம் நான் சொல்ல?
உன்னை ஷெல் தின்றுவிட்டது
ஆயுதங்கள் மேலும் குவிக்கப்படுகையில்
போர் தொடரப்படுகிறபோது
வரைபடங்கள் மேலும்
அவதானிக்கபடுகிறபோது
நம்மை குறித்து என்ன இருக்கிறது?
உன்னிடமும்
நமது காதல் நகரத்திடமும்
நான் திரும்பப்போவதில்லை
திரும்பாத நகரத்தை
நாம் இழந்துவிட
நகரம் நம்மை இழந்திருக்கிறது
நகரமிட்ட முத்தம்
இன்னும் காயாமலிருக்கிறது.
¤
12.05.2009
பாழ்நகரத்தின் பொழுது/2009/காலச்சுவடு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக