Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

Mitt barn: Terrorist/எனது குழந்தை பயங்கரவாதி /நோர்வேஜியன் மொழியாக்கம்


Da de nevnte at fred blomstrer fra våpnene sine
Unnlot jeg å spørre hva fred er

Da de påstod at trygghet sprer seg fra øynene sine
Stilte jeg ikke spørsmål om hvordan trygghet føles

Da de nektet for okkupasjon av vårt land
Spurte jeg ikke om de tvangsbygget Bhuddastatuer og militærbaser i vår jord

Da de sa at alle statsborgere tilhører dette landet
Spurte jeg ikke om hvordan de ville ha behandlet sine søsken
 
Da de hevdet at ingen hadde forsvunnet
Spurte jeg ikke hvor det har blitt av alle som overga seg
 
Da de fastslo at ingen kvinner ble voldtatt
Og ingen av våre menn ble kledd nakne og skutt i bakhodet
Spurte jeg ikke hvordan det oppstod blodbad på vår jord
 
Da de hevdet at ingen sivile ble drept
Og alle de drepte var terrorister
Sa jeg : «Mitt barn er en terrorist»

Dikt (Tamil):Theepachelvan
Oversatt til Norsk: Rooban Sivarajah

புதன், 26 அக்டோபர், 2016

கனவு உப்பிய நெஞ்சறை




ஒரு சோடி பட்டாம் பூச்சிகள்
திரும்பாத திசையிற்
சன்னம் தைத்துக் கிடந்தது
கனவு உப்பிய நெஞ்சறை.

உயிருக்கு மதிப்பற்ற நகரில்
சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும்
நசிந்தொட்டிய வெற்றுடல்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல
சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல
கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை.

குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன
உருளும் பந்துகளும்
சில்லுடைந்த மோட்டார் வண்டிகளும்.

துவட்டி வளர்த்த பிள்ளையின் தலையை
சுவருடன் அடித்துப் பிளந்தவர்கள்
தாயிடம் உயிருக்கு ஈடுபேசினர்
ஒரு சவப்பெட்டியை தருவதாய்

கல்லிருக்கையில் விரிந்து பறக்கும்
அப்பியாசப் புத்தங்கள்போல்
படபடக்கும் இவ் நகரம்
துப்பாக்கிகளுக்கே பரிசளிக்கப்பட்டது.

போர் சக்கரத்தில் தப்பிய பிள்ளையை
நசித்தது யானை

காலம்தோறும்
கழுத்துக்களை திருகும் சீருடைகளே வேறுவேறு
துப்பாக்கிகளும் சிந்தப்பட்ட குருதியும் ஒன்றுதான்.
0

தீபச்செல்வன்

ஓவியம் - வசந்தரூபன்
நன்றி - குளோபல் தமிழ்ச் செய்திகள்

சனி, 22 அக்டோபர், 2016

பூக்கும் பறவை

 

சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்கும்
தேசத்தில் செண்பகப் பறவைகள் வந்து
பூவரச மரங்களில் அமரும்

காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன

மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்

சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
பறவையைப்போலான
எனது அழகிய தேசம் பூக்கும்.

2012

நன்றி - சமூகநீதித் தமிழ்த் தேசம் செப்டம்பர்
தொகுப்பு - எனது குழந்தை பயங்கரவாதி

புதன், 12 அக்டோபர், 2016

Mon enfant était un terroriste/ பிரஞ்சு மொழியாக்கம்/ எனது குழந்தை பயங்கரவாதி/ வாசுதேவன்


Lorsqu'il a déclaré que la paix fleurissait de leurs fusils,
Je ne lui ai pas demandé comment serait la paix,

Lorsqu'il a déclaré que la sécurité émanait de leurs yeux,
Je ne lui ai pas demandé comment la sentir,

Lorsqu'il a nié d'avoir occupé nos terres,
Je ne l'ai pas interrogé sur les camps militaires et les temples bouddhistes,

Lorsqu'il m'a déclaré que nous étions tous des citoyens du même pays,
Je ne lui ai pas demandé comment il se comportait avec les concitoyens,

Lorsqu'il m'a dit que personne n'était porté disparu,
je ne lui ai pas demandé où sont ceux qui s'étaient rendus,

Lorsqu'il a déclaré qu'aucune de nos femmes n'a été violée et tuée,
Qu’aucun de nos jeunes n'a été fusillé dans la nuque, les mains attachées par derrière,
Je ne lui ai pas demandé comment le sang a inondé notre sol.

Lorsqu'il a déclaré qu'ils n'ont tué personne
Et que tous ceux qui étaient tués étaient des terroristes,
Je lui ai dit que mon enfant était un terroriste

Auteur : Theepachelvan
Traduction : K. Vasudevan


வியாழன், 29 செப்டம்பர், 2016

நீர்ப்பறவையின் கேலிக் கோடு




மீன்களை தரையில் எறிவதைப்போல
தொலைதூரம் வீசியெறிந்து
உன்னையும் நாம்தான் கொன்றோம்

புலத்தில் தந்தையர்
நிலத்தில் குழந்தையர்
வழிகளில்
ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும்
காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும்

கீவ் நகரை கடந்தவனைக் காணாது
ஊசியிலை காடுகளும் துடித்தன
போலாந்து எல்லையில்
வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர்
துயரப்பிக் கிடக்கின்றன
உன் கேலியின் கோடுகள்

கூடுகள் பறிபோயிருக்கலாம்
இரையற்று பசியில் மரிக்கலாம்
எல்லாப் பறவைகளும்
வலசைகளாயிருப்பதில்லை

ஆழ்கடலில் குழந்தைகளை
சுமந்தபடி அலைந்து
புகலிடம் நெருங்காது திரும்பிய
சிறு படகைப்போல

தன் தாய் மண்ணிலிருந்து
தூக்கி எறியப்பட்ட
புலம்பெயரா முக்குளிப்பான் பறவை*
உயிர் நீத்தது
உக்ரைன் காட்டில்.

இரைக்காய் காத்திருக்கும்
உன் குஞ்சின் கண்ணீரில் நனையும்
வறண்டுபோன உன்னுடல்.

அஸ்வின் சுதர்சனுக்கு

தீபச்செல்வன்

*முக்குளிப்பான் பறவை புலம்பெயராத நீர்ப் பறவையினம்

நன்றி- குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 21 செப்டம்பர், 2016

Mein Kind ist ein Terrorist/ எனது குழந்தை பயங்கரவாதி/ யேர்மனிய மொழியாக்கம்





Ich fragte nicht
wie der Frieden aussehen könnte,
als er mir sagte,
„der Frieden blühe aus ihren Gewehren“.

Ich fragte nicht
wie die Sicherheit aussehen könnte,
als er mir sagte,
„aus ihren Augen könne man die sie erblicken“.

Ich fragte nicht
wie die Militärlager und Buddhastatuen aussehen könnten,
als er sagte,
dass sie in unser Land nicht zu besetzen hätten.

Ich fragte nicht
wie er seine Brüder behandeln sollte,
als er sagte,
dass wir alle Bürger eines Landes sind.

Ich fragte nicht
wohin die Gefangenen verschwunden sind,
als er sagte,
dass niemand vermisst wurde.

Ich fragte nicht
wie das Blut auf den Boden kam,
als er sagte,
„keine unserer Frauen wurde vergewaltigt und getötet,
keine Jugendlichen wurden nackt in eine Reihe gestellt
und keinem wurde in den Hinterkopf geschossen“.

Als er sagte,
dass er noch nie jemanden umgebracht hätte,
lediglich nur Terroristen,
da habe ich ihm gesagt,
„mein Kind ist ein Terrorist “.
0

Poem - Theepachelvan

translation - sugirtha shanmuganathan


Der zeitgenössische Dichter Theepachelvan ist eine bekannte Persönlichkeit der Tamilischen Literatur. Das Gedicht „Mein Kind ist ein Terrorist“ ist sein berühmtestes Werk und wird seit der Veröffentlichung rege diskutiert. Übersetzt wurde es von Sugirtha Shanmuganathan, eine in der Schweiz lebende Tamilin.


குறிப்பு 'எனது குழந்தை பயங்கரவாதி' கவிதையை ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு, தற்போது புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் சுகிர்தா சண்முகநாதன் ஜெர்மனிய மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நான் பேசுவேன்


எதுவும் நடக்கலாம் என்பதற்காய்
எதுவும் பேசப்படலாம்
பின்னர் எதுவும் நடக்கலாம்
கறுப்பை வெள்ளை நிறமெனச் சொல்லக் கூடும்

துயரக் காலத்தில் வசந்தம் பொழிகின்றது என்று
சொல்லக்கூடும்
யாரோ தலைவன் எனவும்
யாரோ காவலன் எனவும்
ஆக்கிரமித்திருப்பவர்களை பாதுகாவலர்கள் எனவும்
சொல்லக் கூடும்
கொடுநரகத்தை சுவர்க்கம் என்றும் சொல்லக் கூடும்

நாங்கள் சுதந்திரமாக நடத்தப்படுகிறோம்
என்று கணந்தோறும் சொல்லக் கூடும்
சொல்லிக் கொடுப்பவைகளை சொல்ல நேரிடுவதுடன்
சமயத்திற்கு  ஏற்பவும் சிலர் சொல்லவும் கூடும்

கவிஞர்கள் தலைமறைவாயிருக்கும் காலத்தை
ஒரு மகா உன்னத காலத்தில்
வசிக்கிறோம் என்று சொல்லுகையில்
நீ என்ன உணர்வாய்?

கவிதைகள் எழுதப்படாத காலத்தில்
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்
உனது செவி எப்படியானது?
நான் கண்டேன்
அவர்கள் ஒரு கவிஞனை
பத்துக் காசுக்கு விலைக்கு வாங்கினர்
அவர்களுக்காக சொற்களை
வளைத்துக் கொண்டிருக்கும்
அவன் கவிஞன் இல்லை என்றனர் சனங்கள்

சொற்கள் அற்றுப் போயினர் எமது சனங்கள்
ஆனால்
நான் பேசுவேன்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
ஏனெனில் நாம் முகங்களற்றுப் போக இயலாது.
***
தீபச்செல்வன்

ஜீவநதி 2014

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

திரும்ப முடியாத நகரம்


¤

என் நகரத்தின் கடைசி தருணம்
அதுவென நினைத்திருக்கவில்லை
உன்னை முத்திமிடுகிறபோது
அது கடைசி முத்தமெனவும் நினைத்திருக்கவில்லை
போருக்கான வார்த்தைகள்
எழுதப்பட்ட நகரத்தில் உன்னை
தனியே விட்டு வந்தேன்.

எப்படி பிரிந்து போயிற்று என் தெரு?
இழப்பின் கொடுமையை
நீதான் முழுமையாக சுமந்திருந்தாய்
நான் உன்னை இழந்து
தனிப் பறவையாய் வீசப்பட்டேன்.

நமக்கு மேலால் நின்ற நாவல் மரம்
முறிந்து போனதை
நீ எனக்கு சொல்லாமலே விட்டிருந்தாய்
நிழலற்றுத் திரிவதை நான் பார்க்கவுமில்லை
நாம் நாவல் மரத்தை இழந்திருக்க
அது வெளவால்களை இழந்துபேயிற்று.

விமானங்கள் வீடுகளை
கவ்விக்கொண்டு போகிறதாக
நான் கனவு கண்டெழும்புகையில்
நீ நமது நகரத்தில் இருந்து
துரத்தப்பட்டாய்
காலையென்பது இழப்புடன்
தொடர்ந்து விடிகிறது.

எனது பேரூந்து திரும்பவில்லை
காத்திருப்பில் நீ அலைகிற துயர்மிகு
தெருவுக்கு நான் திரும்பவில்லை
போர் உன்னை
என்னிடமிருந்து பிரித்துவிட்டது.

யாரிடம் நான் சொல்ல?

உன்னை ஷெல் தின்றுவிட்டது
ஆயுதங்கள் மேலும் குவிக்கப்படுகையில்
போர் தொடரப்படுகிறபோது
வரைபடங்கள் மேலும்
அவதானிக்கபடுகிறபோது
நம்மை குறித்து என்ன இருக்கிறது?

உன்னிடமும்
நமது காதல் நகரத்திடமும்
நான் திரும்பப்போவதில்லை
திரும்பாத நகரத்தை
நாம் இழந்துவிட
நகரம் நம்மை இழந்திருக்கிறது
நகரமிட்ட முத்தம்
இன்னும் காயாமலிருக்கிறது.
¤

12.05.2009

பாழ்நகரத்தின் பொழுது/2009/காலச்சுவடு

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

من سریلانکایی نیستم! | பாரசீக மொழியாக்கம் | PERSIAN TRANSLATION




برای عبور از مرزها
من ویزا دارم
با گذرنامه اسرائیلی
در دستان یک فلسطینی

برای عبور از بازرسیها
من کارت شناسایی خود را نشان میدهم
همانند یک عراقی که کارت شناسایی یک امریکایی را دارد

برای خرجم
من چندین سکه دارم
همانند داشتن سکه های فرانسوی
با یک فرد سوریه ای

در خاک ما
سرود ملی پخش میشود
همانند سرود ملی هندوستان
که در منیپور پخش میشود

در سرزمین من
پرچم برافراشته شده
همانند پرچم چین
که در تبت خودنمایی میکند

در انگشتان من
اثر مهاجرت یک بی سرزمین مشاهده میشه
همآنند اثرات آتش
در دستان میانمار

Poem- Theepachelvan
Persian Translation- B. Ghasemi

I  AM NOT SRI LANKAN is popular poem in Tamil By poet Theepachelvan. this poem was translation in may languages. This is Persian translation by poet From Iran.
'நான் ஸ்ரீலங்கன் இல்லை!' கவிதை மற்றுமொரு சர்வதேச மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த கவிஞர் B. Ghasemi. பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பாரசீக மொழி ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகின்றது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

நிழற்போர்


பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்
அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்
காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்
காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியே
உன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்
துருவேறிய துப்பாக்கியை

ஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்
அவர்களின் தேவை

பிள்ளைகளைத் தேடும்
எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவே
சிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்
வீழ்ந்து புறளும் தாயே
உன் ஒடிந்த தேகத்தில்
உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியை

ஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்
அவர்களின் தேவை

ஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்
ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்க
அகதிமுகாமொன்றில் தவமிருக்கும்
மெலிந்துருகிய குழந்தையே
உன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியை

ஏனெனில், நம்மை அகதிமுகாங்களில் தடுப்பதுதான்
அவர்களின் தேவை

உடைந்த வாசல்கள் நிறைந்திருக்கும்
விடியாத் தேசத்தில்
மூடா விழிகளுடனிருக்கும்
முதிர்ந்த கிழவனே
உன் வெறுமையான சட்டைப்பையில் திணித்தனர்
மக்கிப்போன குண்டுகளை

ஏனெனில், நம்மை இன்னொரு போருக்குள் தள்ளுவதுதான்
அவர்களின் தேவை

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய்
களம் புகுந்த போராளியே
நிராயுதத்தை தழுவி நீ கைவிட்ட பீரங்கியை
எடுத்து வருகின்றனர்
இன்னொரு முள்ளிவாய்க்காலுக்காய்

ஏனெனில், நமது போராட்டத்தை போராக்குவதுதான்
அவர்களின் தேவை
0

தீபச்செல்வன்
 

நன்றி - விகடன் தடம்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...